இந்தியா பூட்டான் நட்புறவு : புதிய நீர் மின்சார நிலையம் கட்ட இந்தியா உதவி !!

  • Tamil Defense
  • June 30, 2020
  • Comments Off on இந்தியா பூட்டான் நட்புறவு : புதிய நீர் மின்சார நிலையம் கட்ட இந்தியா உதவி !!

இந்தியா மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் 600மெகாவாட் திறன் கொண்ட நீர் மின்சார நிலையத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளன.

பூட்டான் நாட்டின் கிழக்கு பகுதியில் மிகவும் பின்தங்கிய பகுதியான ட்ராஷியாங்ட்ஸே பகுதியில் உள்ள கோலோங்சூ பகுதியில் 600 மெகாவாட் திறன் கொண்ட நீர் மின்சார நிலையத்தை இந்திய உதவியுடன் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் மற்றும் பூட்டானிய வெளியுறவு அமைச்சர் தான்டி டோர்ஜி மேலும் பூட்டானிய பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர் லோக்நாத் ஷர்மா ஆகியோர் முன்னிலையில் கையெழுத்து இடப்பட்டது.

இந்திய பூட்டான் நட்புறவு அடிப்படையில் கடந்த 30ஆண்டுகளில் சுமார் 2100மெகாவாட் திறன் கொண்ட நீர் மின்சார திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

பூட்டானுக்கு சுமார் 10,000 மெகாவாட் திறன் கொண்ட நீர் மின்சார சக்தியை பெற இந்தியா உதவி அளிக்க உறுதி பூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.