
இந்தியாவிடம் பெரிய , அனுபவம் வாய்ந்த மலைசார் போர்முறையில் சிறந்த படைப் பிரிவு உள்ளதாக சீன இராணுவ வல்லுநர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இரஷ்யாவும் அல்ல அமெரிக்காவும் அல்ல இந்தியாவே சிறந்த படை கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.அதிஉயர் பகுதிகளில் போரிடும் அனுபவம் இந்திய வீரர்களுக்கு உள்ளதாக கூறியுள்ளார்.
இந்தியா சீனப் படைகள் எல்லையில் மோதி வரும் நிலையில் இந்த கருத்துவெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மலைப் பிரிவு போரிடும் படைக்கு இந்தியா அனைத்துவித பயிற்சிகளையும் அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.அனுபவம் வாய்ந்த மலையேறிகளையும் இந்தியா படையில் இணைத்துள்ளது என அவர் கூறியுள்ளார்.
12 டிவிசன்களாக 2 லட்சம் வீரர்களை கொண்ட இந்தியாவின் மலையக படைப் பிரிவே உலகின் மிகப் பெரிய பிரிவு என அவர் தெரிவித்துள்ளார்.
இதுதவிர மலைப்பகுதியில் போரிடுவதற்கு ஏற்ற ஆயுதங்களையும் இந்தியா வாங்கி குவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். M777 155mm-towed howitzer தான் உலகிலேயே மிக இலகு ரக ஆர்டில்லரி ஆகும்.சின்னூக் வானூர்தி மூலம் இவற்றை எளிதாக முன்னனி எல்லைப் பகுதிக்கு நகர்த்தி விட முடியும்.
இது தவிர பெரிய காலிபர் சினைப்பர் துப்பாக்கிகளையும் இந்திய இராணுவம் உயர்ரக பகுதிகளில் ஈடுபடுத்தியுள்ளது என அவர் கூறியுள்ளார்.