
அமெரிக்காவில் உள்ள பெல்ஃபேர் அறிவியல் மற்றும் சர்வதேச விவகாரங்கள் கல்லூரி சமீபத்தில் இந்திய மற்றும் சீன ராணுவ பலம் குறித்த ஒரு ஆய்வறிக்கை ஒன்றினை சமர்பித்துள்ளது.
இதில்பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட சில அரசு தரவுகள், பாதுகாப்பு நிபுணர்களின் ஆய்வுக்கட்டுரைகள், சீன, இந்திய மற்றும் அமெரிக்க வல்லுனர்களின் பேட்டிகள் போன்றவை ஆய்வுக்கட்டுரையின் ஆதாரங்கள் ஆகும்.
இதனை தயாரித்தவர்கள் டாக்டர் ஃப்ராங்க் ஒ டான்னல் (ஸ்டிம்சன்ஸ் மையம்) மற்றும் அலெக்ஸாண்டர் கே போல்ஃப்ராஸ் (ஸ்விஸ் ஃபெடரல் கல்லூரியில் மூத்த ஆய்வறிஞர்) ஆகியோர் ஆவர்.
வழக்கமான படைகள் !!
சீன எல்லையோரம் இந்தியா சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் துருப்புகளை நிலைநிறுத்தியுள்ளது எனவும் அதே நேரத்தில் இந்தியாவுடனான எல்லைக்கு பொறுப்பான சீன ராணுவத்தின் மேற்கு கட்டளையகம் சுமார் 2 லட்சத்து 10ஆயிரம் முதல் 2லட்சத்து 30 ஆயிரம் துருப்புகள் வரை நிலைநிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் போர்க்காலத்தில் சீனாவால் இத்தனை வீரர்களையும் களமிறக்க முடியாது காரணம் ஸின்ஜியாங் மற்றும் திபெத்தில் போராட்டங்களை அடக்கவும், ரஷ்ய எல்லையிலும் கணிசமான அளவில் படைகள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதைப்போல இதில் பெரும்பாலான சீன படையினர் இந்திய எல்லையோரத்தில் நிலைநிறுத்தப்படாமல் உட்பகுதிகளில் உள்ளனர் ஆனால் இதற்கு நேர் மாறாக இந்திய படைகளில் பெரும்பாலானவை சீன எல்லையோர பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
விமானப்படை சக்தி !!
சீன விமானப்படையும் கணிசமான அளவில் இந்தியாவுக்கு எதிராக பலவீனமான நிலையில் உள்ளது.
சீனாவின் மேற்கு கட்டளையகம் 101 நான்காம் தலைமுறை போர்விமானங்களை கொண்டுள்ளது அவற்றில் பல ரஷ்ய எல்லை பாதுகாப்பிலும் பயன்படுத்தி வரப்படுகின்றன. அதே நேரத்தில் இந்திய விமானப்படையின் 122 நான்காம் தலைமுறை போர் விமானங்கள் சீனாவை எதிர்நோக்கி நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் சீன விமானப்படையின் போர் விமானங்கள் எல்லைக்கு அருகில் உள்ள தளங்களில் இருந்து இயங்கினால் அதிக ஆயுதங்களை சுமக்க முடியாது அதனால் உட்பகுதிகளில் உள்ள படைத்தளங்களை பெரிதும் நம்ப வேண்டிய சூழல் நிலவுகிறது. ஆனால் அதிலும் ஒரு சிக்கல் உண்டு அதிக தொலைவு காரணமாக எரிபொருள் தீர்ந்து குறைந்து நேரமே சீன போர்விமானங்கள் பறக்க வேண்டிய நிலை உள்ளது.
சீன விமானப்படை விமானிகளுக்கு போர் அனுபவம் அறவே இல்லை, தரைகட்டுபாட்டு பையங்களை தான் பெரிதும் நம்பி செயல்படுகின்றனர் ஆனால் இந்திய விமானப்படையின் விமானிகள் மிகுந்த அனுபவம் மிக்கவர்கள். 4 போர்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய விமானப்படை தளங்கள் மற்றும் ஒடுபாதைகளை தாக்க சீனா முடிவெடுத்தால் அதிலும் சிக்கல்கள் உள்ளன காரணம் ஒரு நாளைக்கு 660 பலிஸ்டிக் ஏவுகணைகள் சீனாவுக்கு தேவைப்படும் ஆனால் சீனாவிடம் இருப்பதே 1200 இடைதூர மற்றும் குறுந்தூர பலிஸ்டிக் ஏவுகணைகள் இரண்டே நாட்களில் காலி ஆகிவிடும்.
இதைத்தவிர இந்திய தரைப்படை உலகிலேயே மிகப்பெரிய அனுபவம் மிகுந்து மலையக போர்ப்படை பிரிவுகளை கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.