போர் விமானங்கள், முன்னனி போர்கப்பல்கள் வியூக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு நகர ஆணை !!

  • Tamil Defense
  • June 17, 2020
  • Comments Off on போர் விமானங்கள், முன்னனி போர்கப்பல்கள் வியூக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு நகர ஆணை !!

இந்திய அரசு முப்படைகளுக்கும் போர்க்காலத்திற்கு தேவையான சப்ளைகளை கொள்முதல் செய்ய சிறப்பு அதிகாரங்களை வழங்கி உள்ளது.

தற்போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை போல் இனி எதுவும் நடக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதைப்போல கூட்டு படைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் முப்படைகளையும் ஒருங்கிணைத்து உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்.

இந்திய கடற்படை தனது முன்னனி போர்க்கப்பல்களை மலாக்கா ஜலசந்தி அருகேயும் தேவைப்பட்டால் இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்தில் எங்கு வேண்டுமானாலும் நகர்த்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானப்படையும் போர் விமானங்களை முன்னனி தளங்களுக்கு அனுப்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.