
இந்திய சீன எல்லையோரம் 32 அதி முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளின் கட்டுமானத்தை விரைவுபடுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து தில்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் எல்லை மேலாண்மை பிரிவு செயலர். எம.ஆர். ஷர்மா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ராணுவ அதிகாரிகள், எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பு அதிகாரிகள், இந்தோ திபெத் எல்லை காவல்படை அதிகாரிகள் மற்றும் மத்திய பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
1500 கூடுதல் பணியாளர்கள் இப்பணிகளை விரைவுபடுத்த அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.