Breaking News

காமோவ் ஹெலிகாப்டர், ஏகே203 துப்பாக்கி ஒப்பந்தங்களை விரைவுபடுத்த இந்தியா ரஷ்யா முடிவு !!

  • Tamil Defense
  • June 27, 2020
  • Comments Off on காமோவ் ஹெலிகாப்டர், ஏகே203 துப்பாக்கி ஒப்பந்தங்களை விரைவுபடுத்த இந்தியா ரஷ்யா முடிவு !!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு சென்றுள்ளார். அங்கு ரஷ்ய.பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து பல்வேறு ஆயுத ஒப்பந்தங்கள், பாதுகாப்பு ஒத்துழைப்பு விவகாரங்கள் குறித்து பேசினார்.

அப்போது இந்திய தரைப்படைக்கு வாங்கப்படவுள்ள காமோவ்226டி ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் உள்ள சிக்கல்களை களைந்து விட்டு அதனை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்மூலம் இந்தியாவிலேயே சுமார் 200 காமோவ்226டி ரக ஹெலிகாப்டர்களை தயாரித்து படையில் இணைக்க உள்ளோம்.

அதைப்போல சுமார் 6லட்சத்திற்கும் அதிகமான ஏகே203 துப்பாக்கிகளை கூட்டு தயாரிப்பு அடிப்படையில் இந்தியாவிலேயே தயாரிக்க உள்ளோம்.

இந்த ஒப்பந்தத்தில் உள்ள விலை நிர்ணயம் தொடர்பான பிரச்சினைகளை களைந்து விட்டு இதையும் விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.