
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் எல்லைப்பகுதியில் நிலவும் பதட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க இருநாடுகளும் முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் இன்று இந்திய சீன வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.
கடந்த ஜூன்22 அன்று இந்திய ராணுவத்தின் லெஃப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் மற்றும் சீன ராணுவத்தின் மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் இடையே சுமார் 11மணி நேர பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னரும் சுமுகமான முடிவு ஏற்படவில்லை.
நாளுக்கு நாள் எல்லை பிரச்சனை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.