

இந்தியா மற்றும் சீனா இடையே லடாக்கில் நிலவி வரும் எல்லைப் பிரச்சினை கவலையளிப்பதாக உள்ளது என ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான ரஷ்ய துணை தூதர் ரோமன் பபூஷ்கின் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்தியா மற்றும் சீனா இடையே நிலவி வரும் பதற்றம் இருநாடுகளுக்கும் நண்பண் என்ற முறையில் ரஷ்யாவுக்கு கவலையளிப்பதாகவும், இதனை சுமுகமாக இருநாடுகளும் முடித்து கொள்ள வேண்டுமெனவும் கூறினார்
மேலும் பேசுகையில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இதற்கென தேவையான நடவடிக்கைகளை அனைத்து மட்டத்திலும் எடுக்க வேண்டுமெனவும் ரஷ்யா இருதரப்பு நல்லுறவுக்கும் ஆதரவாக பாலமாக உறுதணையாக அமையும் எனவும் கூறினார்.
இப்பிரச்சினை குறித்து ரஷ்யா அதிகாரப்பூர்வமாக தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.