பேச்சுவார்த்தை நிறைவு; முடிவு என்ன ?

  • Tamil Defense
  • June 6, 2020
  • Comments Off on பேச்சுவார்த்தை நிறைவு; முடிவு என்ன ?

இந்தியா-சீனா உயர்மட்ட அளவு இராணுவ கமாண்டர்களின் பேச்சுவார்த்தை முடிவு பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எல்லையில் சீனப்பகுதியில் மோல்டோ எனுமிடத்தில் நடந்த பேச்சுவார்த்தை தற்போது முடிவு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா சார்பில் 14வது கார்ப்ஸ் கமாண்டர் லெப் ஜென் ஹரிந்தர் சிங் தலைமையிலான கமாண்டர் படை குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

கடந்த சில நாட்களாகவே இரு நாடுகளும் எல்லையில் மோதி வருகின்றன.இதை நிறுத்த பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட பின்பும் பதற்றம் குறையவில்லை.

பேச்சுவார்த்தை முடிந்து லெப் ஜென் லே நோக்கி திரும்பி வருகிறார்.பேச்சுவார்த்தை குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படாத நிலையில் பிரச்சனையை பெரிதாக்கும் வகையில் ஊடகங்கள் செய்தி வெளியிடாமல் பொறுப்புடன் நடக்க இராணுவம் கூறியுள்ளது.