தோல்வியில் முடிந்த இந்தியா-சீனா இராணுவ பேச்சுவார்த்தை-நடந்தது என்ன ?

  • Tamil Defense
  • June 7, 2020
  • Comments Off on தோல்வியில் முடிந்த இந்தியா-சீனா இராணுவ பேச்சுவார்த்தை-நடந்தது என்ன ?

லெப்டினன்ட் ஜெனரல்கள் தலைமையிலான இந்திய மற்றும் சீன இராணுவ அதிகாரிகளுக்கு இடையே சனிக்கிழமையன்று நடந்த முக்கியமான சந்திப்பு “முடிவில்லாமல்” முடிந்தது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா சார்பில் 14 கார்ப்ஸ் கமாண்டிங் அதிகாரி லெப் ஜென் ஹரிந்தர் சிங் மற்றும் சீனா சார்பில் மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.மோதலின் ஒரு மாத காலத்திற்கு பிறகு இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதற்கு முன் மேஜர் ஜெனரல்கள் அளவிலான பேச்சுவார்த்தைகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.தற்போது தான் முதல் முறையாக லெப்டினன்ட் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

மேற்கு இராணுவ கட்டளையக தளபதி லெப் ஜென் ஜோசி அவர்களும் தற்போது லடாக் பகுதியில் இந்திய படைகளின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்துள்ளார்.

லோக்கல் மிலிட்டரி கமாண்டர்கள் மற்றும் மேஜர் ஜெனரல்கள் தலைமையிலான சில சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தான் தற்போது லெப் ஜென் அளவிலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிவின்மையை நோக்கி தான் சென்றுள்ளது.

சீனா சாமர்த்தியமாகவே காய் நகர்த்தியுள்ளது.இது விரைவில் முடியபோவதில்லை என முன்னாள் வடக்கு கட்டளையக தளபதி லெப் ஜென் ஜஸ்வால் அவர்கள் கூறியுள்ளார்.

டோகலாமை விட இது நீண்டதாக இருக்க போகிறது என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.