
சீனாவுடனான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து தான் வருகிறது.இந்நிலையில் இந்திய விமானப்படைக்காக இஸ்ரேலிடம் இருந்து SPICE-2000 குண்டுகள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்திய விமானப்படை இந்த குண்டுகளை பயன்படுத்தி தான் பாலக்கோட்டில் இருந்த பயங்கரவாத முகாம்களை அழித்தது குறிப்பிடத்தக்கது.
எதிரி எல்லைக்குள் இருக்கும் பங்கர்கள்,கட்டிடங்கள் ஆகியவற்றை ஓர் பாதுகாப்பான இடத்தில் இருந்தவாறே இந்த குண்டுகள் மூலம் தாக்கி அழிக்க முடியும்.
இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 விமானங்களில் இருந்து இந்த ஸ்பைஸ் குண்டுகளை வீசலாம்.நன்கு கடினமாக கட்டமைக்கப்பட்ட பங்கர்களை கூட இவற்றால் தரைமட்டம் ஆக்க முடியும்.
இந்திய பாதுகாப்பு படைகள் அவசர நிதி சக்தியை பயன்படுத்தி பல்வேறு தளவாடங்களை பெற்று வருகின்றன.