அமெரிக்காவிடம் இருந்து போர்க்கால அடிப்படையில் அதிநவீன எக்ஸ்காலிபர் பீரங்கி குண்டுகளை வாங்கும் இந்தியா !!

  • Tamil Defense
  • June 24, 2020
  • Comments Off on அமெரிக்காவிடம் இருந்து போர்க்கால அடிப்படையில் அதிநவீன எக்ஸ்காலிபர் பீரங்கி குண்டுகளை வாங்கும் இந்தியா !!

அமெரிக்காவிடம் இருந்து போர்க்கால அடிப்படையில் அதிநவீன எக்ஸ்காலிபர் பீரங்கி குண்டுகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த எக்ஸ்காலிபர் குண்டுகளை பிரதானமாக எம்777 பிரங்கிகளில் பயன்படுத்துவர், இந்த வகை பிரங்கிகளில் 25ஐ தற்போது இந்திய தரைப்படை பயன்படுத்தி வருகிறது. இனியும் 120 பிரங்கிகள் படையில் இணைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குண்டுகளை சாட்டிலைட் மூலமாக இலக்குகளை நோக்கி வழிநடத்த முடியும் இதன் மூலம் அதிக அளவு துல்லியத்துடன் எதிரி இலக்குகளை தாக்கி அதிக சேதத்தை இது உண்டு பண்ணக்கூடியது.

பாலகோட் தாக்குதலுக்கு பிறகு தான் முதன் முதலாக இந்த வகை குண்டுகளை நாம் வாங்கினோம், தற்போது இந்திய சீன எல்லை பிரச்சினையின் போது இவற்றை வாங்க முடிவெடுத்துள்ளது தனது பலத்தை தரைப்படை அதிகரிக்க விரும்புவதை காட்டுகிறது.

சில நாட்கள் முன்னர் தான் முப்படைகளுக்கும் சிறப்பு அதிகாரங்கள் வாயிலாக அவசர கால கொள்முதலுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது