
லடாக்கில் இந்தியா சீனா இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில் அவசரமாக இந்திய விமானப்படை தனது பலத்தை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது.
அதன்படி உடனடியாக 12 சுகோய்30 விமானங்கள், 21 மிக்29 போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்பி உள்ளது.
சுமார் 5000கோடி மதிப்புமிக்க இந்த ஒப்பந்தம் குறித்த இறுதி முடிவை அடுத்த வாரத்திற்குள் மத்திய அரசு அறிவிக்க உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.