
59 சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டதை அடுத்து நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு செயலாளர் ஜாவோ லிஜியன் இதுகுறித்து பேசுகையில் சீன அரசு எப்போதும் தங்கள் நாட்டு நிறுவனங்களை சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்கும் படி அறிவுறுத்தி உள்ளதாகவும் அதை போல இந்தியாவும் சர்வதேச வர்த்தக விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் எனவும் கூறினார்.
தடை செய்யப்பட்ட 59 செயலிகளும் தகவல் திருட்டு மற்றும் கடத்தல் போன்ற செயல்களால் இந்திய மக்கள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.