இந்திய கடற்படை மற்றும் ஜப்பானிய கடற்படை ஆகியவை இணைந்து பயிற்சி !!

  • Tamil Defense
  • June 28, 2020
  • Comments Off on இந்திய கடற்படை மற்றும் ஜப்பானிய கடற்படை ஆகியவை இணைந்து பயிற்சி !!

சீனா உலக நாடுகளை தனது மண்ணாதிக்க ஆசை காரணமாக அச்சுறுத்தி வரும் நிலையில் இந்திய மற்றும் ஜப்பானிய கடற்படை ஆகியவை இணைந்து பயிற்சி மேற்கொண்டு உள்ளன.

இந்தியாவுக்கான ஜப்பானிய தூதர் சடோஷோ சுஸூகி கடந்த 27ஆம் தேதி இந்த பயிற்சி நடைபெற்றதை உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்த பயிற்சியில் ஜப்பான் சார்பில் பயிற்சி படையணி ஒன்றும் இந்திய கடற்படை சார்பில் ஐ.என்.எஸ் ராணா மற்றும் ஐ.என்.எஸ் குலிஷ் ஆகியவை பங்கு பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.