
பிரச்சினைக்குரிய பகுதிகளில் இருந்து படைகளை குறைக்கும் இந்தியா மற்றும் சீனா, இன்று மேஜர் ஜெனரல் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை !!
கிழக்கு லடாக்கில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் எல்லை பிரச்சினை காரணமாக அதிகளவில் படைகளை குவித்து உள்ளன.
தற்போது பிரச்சினைக்குரிய நான்கு பகுதிகளிலும் இருந்தது இரு தரப்பினரும் படைகளை குறைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது பிரச்சினையை சுமுகமாக முடித்து கொள்ளும் நடைமுறை தொடங்கி உள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாக வீரர்கள் மற்றும் தளவாடங்கள் குறைப்பு நடைபெறுவதாகவும் தெரிகிறது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் இன்று மறுபடியும் மேஜர் ஜெனரல் அதிகாரிகள் மட்டத்திலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இப்பேச்சுவார்த்தையில் இருதரப்பும் பிரச்சனையை சுமுகமாக முடித்து கொள்வதை பற்றி விவாதிக்கும் என தெரிகிறது.