மீண்டும் நாளை பேச்சுவார்த்தை-பிரச்சனை முடிவுக்கு வருமா ?

  • Tamil Defense
  • June 29, 2020
  • Comments Off on மீண்டும் நாளை பேச்சுவார்த்தை-பிரச்சனை முடிவுக்கு வருமா ?

லடாக் பிராந்தியத்தில் தற்போது நடைபெற்று வரும் இந்திய சீன எல்லைப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு மேலும் ஒரு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

லடாக்கின் சூசுல் பகுதியில் இந்த பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது.தற்போதுள்ள பிரச்சனையின் தீவிரத்தை குறைக்கும் வண்ணம் இந்த பேச்சுவார்த்தை அமைய உள்ளது.

எல்லைப் பிரச்சனை தொடர்பாக நடைபெறும் மூன்றாவது பேச்சுவார்த்தை இதுவாகும்.கல்வான் மோதலுக்கு பிறகு ஜீன் 22ல் கடைசியாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில் இந்தியா சார்பில் 14வது கோர்ப்ஸ் படைப்பிரிவின் கமாண்டர் லெப் ஜென் ஹரிந்தர் அவர்களும் சீனா சார்பில் தெற்கு க்சின்சியாங் பகுதி இராணுவ கமாண்டர் மேஜர் லியு லின் அவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் சில பகுதிகளில் இருந்து இரு நாட்டு படைகளும் பின்வாங்குவது என்ற முடிவு எடுக்கப்பட்டது.எனினும் இது வரை பின்வாங்கலோ அல்லது இராணுவக் குவிப்போ குறையவில்லை/நடக்கவில்லை.

இதற்கு முன் ஜீன் 6 அன்று முதல் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
நாளை நடைபெற உள்ள பேச்சுவார்த்தை காலை 10:30க்கு தொடங்க உள்ளது.

இரு நாடுகளும் தொடர் படைக்குவிப்பில் ஈடுபட்டு வருகின்றன.