பேச்சுவார்த்தை தோல்விக்கு பின்னர் எல்லை அருகே அதிகரித்துள்ள சீன ஹெலிகாப்டர்களின் நடமாட்டம் !!

  • Tamil Defense
  • June 9, 2020
  • Comments Off on பேச்சுவார்த்தை தோல்விக்கு பின்னர் எல்லை அருகே அதிகரித்துள்ள சீன ஹெலிகாப்டர்களின் நடமாட்டம் !!

கடந்த பல நாட்களாக இந்திய மற்றும் சீன ராணுவங்கள் இடையே லடாக்கில் பிரச்சினை நிலவி வருகிறது. இது குறித்து கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதையடுத்து எல்லையோரம் தற்போது சீன ராணுவ ஹெலிகாப்டர்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

இந்த ஹெலிகாப்டர்கள் சீன ரிணுவ படையினரை குவிக்கவும், சப்ளை பொருட்களை கொண்டு சேர்க்கவும், இந்திய படைகளை கண்காணிக்கவும் சீனாவுக்கு உதவியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பல நாட்கள் முன்னதாக சீன போர்விமானங்கள் எல்லை அருகே பறந்ததும், ஒரு முறை எல்லை தாண்டிய சீன ஹெலிகாப்டர்களை விரட்ட இந்திய விமானப்படை விமானங்கள் அனுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.