ஹவில்தார் பழனி கர்னல் சந்தோஷ் பாபுவால் அவரது புத்திகூர்மை காரணமாக அதிகம் நம்பப்பட்ட வீரர் !!

  • Tamil Defense
  • June 26, 2020
  • Comments Off on ஹவில்தார் பழனி கர்னல் சந்தோஷ் பாபுவால் அவரது புத்திகூர்மை காரணமாக அதிகம் நம்பப்பட்ட வீரர் !!

ஹவில்தார் பழனி கர்னல். சந்தோஷ் பாபுவால் அதிகம் நம்பப்பட்ட வீரராக இருந்திருக்கிறார். இதன் காரணமாகவே தன்னுடன் எப்போதும் ஹவில்தார். பழனியை வைத்திருக்கிறார்.

கல்வானில் மோதல் நடந்த அன்றும் தன்னுடன் ஹவில்தார் பழனி மற்றும் சில் வீரர்களை அழைத்து சென்று சீன கூடாரங்களை சிறிது கைகலப்பிற்கு பின்னர் அகற்றியுள்ளனர்.

கர்னல் சந்தோஷ் பாபு மற்றும் ஹவில்தார் பழனி ஆகியோர் இணைந்தே சீனர்களுடன் மிக கடுமையாக சண்டையிட்டு உள்ளனர், இருவரும் சேர்ந்தே வீரமரணமடைந்து உள்ளனர்.

நமது ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ஹவில்தார் பழனி, தரைப்படையின் 81ஆவது ஃபீல்டு பிரங்கி படைப்பிரிவில் (81 Field Artillery) ( பணியாற்றி வந்தார்.

பொதுவாக எல்லை பகுதிகளில் காலாட்படையினருடன், பிரங்கி படையினரும் இணைந்தே பணியமர்த்தப்படுவர். அந்த வகையில் பீஹார் ரெஜிமென்ட்டின் 16ஆவது பட்டாலியனுடன் 81ஆவது பிரங்கி நடைப்பிரிவினர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

கர்னல். சந்தோஷ் பாபு ஹவில்தார் பழனி அவர்களை அவரது பத்திகூர்மை காரணமாக எப்போதும் தன்னுடன் அழைத்து செல்வது வழக்கம். வெறும் புத்திக்கூர்மை மட்டுமின்றி ஹவில்தார் பழனி ஒரு சிறந்த வீரராக விளங்கியுள்ளார் என ஒரு ராணுவ அதிகாரி கூறினார்.

கல்வானில் நடந்த மோதலின் போது மிகவும் தீரமாக சண்டையிட்டு சீனர்களை கொன்று குவித்த பின்னரே இருவரும் வீரமரணமடைந்துள்ளனர். இவர்களின் வீரத்தால் ஈர்க்கப்பட்டு மற்ற வீரர்களும் சண்டையிட்டது சீனர்களை நடுங்க வைத்துவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

81ஆவது பீல்ட் ஆர்டில்லரி படையினர் கூறுகையில் ஹவில்தார் பழனி எங்களது ரெஜிமென்ட்டின் உத்வேகமாக இருந்தார் என்றனர்.

இத்தகைய வீரனுக்கு நமது வீரவணக்கங்களை தெரிவித்து கொள்கிறோம்.