
சீனாவின் கிழக்கு கட்டளையக தளபதியான ஜெனரல். ஜாவோ ஜாங்கி மற்றும் வேறு சில மூத்த சீன ராணுவ அதிகாரிகள் கல்வான் தாக்குதலை நடத்த உத்தரவிட்டதாக அமெரிக்க உளவுத்தகவல் கூறுகிறது.
சீனா, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு முன்னால் பலவீனமாக தெரியக்கூடாது என்பதற்காக முரட்டுத்தனமான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற யோசனையின் அடிப்படையில் பல பகுதிகளில் வம்பிழுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தான் கல்வான் பள்ளதாக்கிலும் நமது வீரர்கள் மீது சீன வீரர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். ஆனால் அவர்கள் நினைத்ததற்கு எதிர்மாறான விளைவுகளை சீனா சந்தித்து உள்ளது.
35சீன வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தியையும் அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.