1 min read
இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது பாதுகாப்பு இணை அமைச்சர் கிஷன் ரெட்டி !!
தெலுங்கானா மாநிலம் சூர்யபேட் பகுதியில் வசிக்கும் கர்னல் சந்தோஷ் பாபுவின் குடும்பத்தினரை நேற்று பாதுகாப்பு இணை அமைச்சர் கிஷன் ரெட்டி சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் “இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் சீனப் படைகளை திறம்பட கையாளவும் உத்தரவு இடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கல்வானில் வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இந்திய ராணுவம் மற்றும் மத்திய அரசு ஆகியவை உறுதுணையாக இருக்கும் என்ற அவர் அதன் காரணமாகவே தான் கர்னல் சந்தோஷ் பாபுவின் குடும்பத்தை சந்தித்ததாக கூறினார்.