ரபேல் முதல் மிக்-21 வரை : சீனாவுடன் போர் எனில் முக்கிய பங்கு வகிக்க போகும் விமானப்படையின் பலம் ஓர் அலசல்

  • Tamil Defense
  • June 6, 2020
  • Comments Off on ரபேல் முதல் மிக்-21 வரை : சீனாவுடன் போர் எனில் முக்கிய பங்கு வகிக்க போகும் விமானப்படையின் பலம் ஓர் அலசல்

இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) தற்போது ஏழு ரகபோர் விமானங்களை இயக்குகிறது, அவற்றில் சுகோய் சு -30 எம்.கே.ஐ, லைட் காம்பாட் விமானம் தேஜாஸ், மிராஜ் 2000, மைக்கோயன்-குரேவிச் மிக் -29, மிக் -21 மற்றும் செப்காட் ஜாகுவார் ஆகியவை செயலில் உள்ளன.இவை தவிர ரபேல் சிறிது காலத்திற்குள் இந்தியா வரும்.விமானப்படை கிட்டத்தட்ட 900 காம்பாட் போர் விமானங்களைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் மொத்த விமானங்கள் 1720 க்கும் அதிகமாக செயலில் உள்ளன.

IAF-ன் முதுகெலும்பு தற்போது ரஷ்ய தயாரிப்பு சுகோய் சு -30 எம்.கே.ஐ விமானங்கள் தான். இரட்டை இருக்கைகள், இரட்டை என்ஜின் கொண்ட இந்த பலபணி போர் விமானங்கள் 272 தற்போது செயல்பாட்டில் உள்ளன.சேவையில் 272 சு -30 எம்.கே.ஐக்கள் உள்ளன, அவற்றில் சில சூப்பர்சோனிக் பிரம்மோஸ் ஏவும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு தயாரிப்பான சூப்பர்சோனிக் எல்.சி.ஏ தேஜாஸ் 2016 ஆம் ஆண்டில் முதலில் சேவையில் நுழைந்தது. ஃபைனல் ஆபரேஷனல் கிளியரன்ஸ் (எஃப்ஓசி) தகுதி பெற்ற விமானத்தின் மேம்பட்ட எம்.கே -1 பதிப்பைக் கொண்ட இரண்டாவது படை 2020 மே 27 அன்று தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள சுலூர் விமானப்படை நிலையத்தில் படையில் இணைக்கப்பட்டது.

தேஜாஸ் முதன்மையாக மிக் -21 பைசான்களை மாற்றுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ஏடிஏ) மற்றும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) வடிவமைத்து உருவாக்கிய உள்நாட்டு ஜெட் விமானம் தான் தேஜஸ்.முதல் ஸ்குவாட்ரான் 45 பிளையின் டேக்கர்ஸ் மற்றும் இரண்டாவது ஸ்குவாட்ரான் 18 பிளையின் புல்லட் ஆகியவை தற்போது செயல்பாட்டில் உள்ளன.

ஐ.ஏ.எஃப் தற்போது இரண்டு படைப்பிரிவுகளில் சுமார் 20 தேஜாஸ் ஜெட் விமானங்களை இயக்குகிறது.முதலில் 40 விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது.Mk1A வகையில் மேலும் 83 விமானங்கள் ஆர்டர் செய்யப்பட உள்ளன.

மிக் -21 பைசன், 1964 ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஃப் உடன் இணைந்த முதல் மிக்-21 விமான ரகம் ஆகும். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் கொண்ட சிறந்த ராடார் உடன் போர் விமானங்கள் வருவதற்கு முன்பு பல தசாப்தங்களாக இந்தியாவின் மிக சக்திவாய்ந்த போராளியாக மிக்-21 இருந்தது.ஒற்றை இயந்திரம், ஒற்றை இருக்கை கொண்ட மல்டிரோல் போர் / தரை தாக்குதல் விமானம் வான்வழி சண்டையில் பாகிஸ்தான் விமானப்படையின் (பிஏஎஃப்) மிகவும் மேம்பட்ட எஃப் -16 பால்கானை சுட்டு வீழ்த்தியது நாம் அனைவரும் அறிந்ததே.

அடுத்து மிராஜ் 2000 விமானம்.புல்வாமா தாக்குதலுக்கு பழிதீர்க்க பாக் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்களை தவிடுபொடியாக்கியவை இந்த மிராஜ் 2000 விமானங்கள் தான்.விமானப்படையில் தற்போது உள்ள விமானங்களில் ஆகச் சிறந்த விமானமாக மிராஜ்ஜை கூறலாம்.இந்தியா தற்போது 57 மிராஜ் விமானங்களை இயக்கி வருகிறது.

அடுத்து மிக்-29 விமானம்.இரண்டு என்ஜின் ஒற்றை இருக்கை கொண்ட வானாத்திக்கை பறவை தான் MiG-29.தற்போது 69 MiG-29 விமானங்கள் விமானப்படையில் உள்ளன.

அடுத்து SEPECAT ஜாகுவார். இரட்டை இயந்திரம், ஒற்றை இருக்கைகள் கொண்ட எதிரி நிலத்தில் ஆழமான ஊடுருவல் செய்து தாக்கும் விமானம் ஆகும். தற்போது 139 போர் விமானங்கள் சேவையில் உள்ளன.

கடைசியாக ரபேல்.36 விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.அதாவது இரு ஸ்குவாட்ரான்கள்.ஹரியானாவின் அம்பாலா தளத்தில் உள்ள கோல்டன் ஏரோஸ் 17வது ஸ்குவாட்ரான் தற்போது ரபேல் விமானங்களை வரவேற்க தயாராக உள்ளது.அதன் பிறகு 101வது ஸ்குவாட்ரான் பால்கன் ஹசிம்மர விமான தளம் இரண்டாவது ஸ்குவாட்ரானை பெறும்.

தற்போது நூற்றுக்கணக்கில் புதிய விமானங்கள் இந்திய விமானப்படைக்கு தேவையாக உள்ளது.