“லடாக் முதல் அருணாச்சல் வரை” மொத்த எல்லையிலும் சீனா படைக்குவிப்பு

  • Tamil Defense
  • June 12, 2020
  • Comments Off on “லடாக் முதல் அருணாச்சல் வரை” மொத்த எல்லையிலும் சீனா படைக்குவிப்பு

கிழக்கு லடாக் பகுதியில் பிரச்சனையை தீர்க்க இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் தற்போது இந்தியா திபத் எல்லையான 4000கிமீ தொலைவிற்கும் சீனா தற்போது தனது படைகளை குவித்துள்ளது.
இந்தியாவும் தனது தாக்கும் படைப் பிரிவுகளை ஹிமாச்சல்,உத்தரகண்ட் ,சிக்கிம் மற்றும் அருணாச்சலில் உள்ள முன்னனி நிலைகளுக்கு அனுப்பியுள்ளது.

பல வருடங்களுக்கு பிறகு இந்தியாவும் சீனாவும் இதுபோன்றதொரு எல்லை மோதலில் தற்போது ஈடுபட்டு வருகின்றன.கிழக்கு லடாக் மற்றும் சிக்கிமின் நாகுலாவில் தொடங்கிய சண்டை தற்போது எல்லை முழுவதிற்கும் விரிந்துள்ளது.

இந்தியாவுடன் சீனா எல்லையை பகிர்ந்து கொள்ளும் அனைத்து எல்லைப்பகுதியிலும் வீரர்கள் மட்டுமல்லாது கனரக ஆயுதங்களையும் சீனா குவித்துள்ளது.

சீனா நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக நமது படைகளை நாம் எல்லைக்கு முன்னனி நிலைகளுக்கு அனுப்பியுள்ளோம்.

காரு என்னும் இடத்தில் உள்ள 3வது இன்பான்ட்ரி டிவிசனுக்கு பலத்தை ஊட்டும் வகையில் கார்ப்சின் ரிசர்வ் பிரைகேடுகள் தற்போது அனுப்பப்பட்டுள்ளன.மேலதிக தாக்கும் படைப்பிரிவுகள் ஹிமாச்சல் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

உத்ரகண்டிலும் ஹர்சில்-பரஹோடி-நிலங்க் பள்ளத்தாக்கு பகுதிக்கு மேலதிக படைப் பிரிவுகள் அனுப்பப்பட்டுள்ளன.

கிழக்கு பகுதி செக்டாரை பொருத்தவரை சிக்கன் நெக் காரிடர் பகுதிக்கும் படைப் பிரிவு அனுப்பப்பட்டுள்ளது.சுக்னாவில் உள்ள 33வது கார்ப்ஸ் மற்றும் தேஸ்பூரில் உள்ள 4வது கார்ப்ஸ் உள்ளிட்டு கார்ப்ஸ் ஃபார்மேசனின் பயிற்சி பிரிகேடுகள் வரை முன்னனி பகுதிக்கு செல்ல தயாராக உள்ளன.17 மலையக தாக்கும் பிரிவும் தற்போது முன்னனி எல்லைக்கு செல்ல உள்ளது.

இது தவிர இந்தியா தற்போது பெற்றுள்ள இலகுஎடை ஹொவிட்சர் மற்றும் மற்ற கனரக ஆர்டில்லரிகள் மற்றும் ஆயுதங்களை சீன எல்லைக்கு அனுப்பியுள்ளது.

சீனா தனது படைப் பிரிவை எல்லைக்கு மறுபுறம் குவித்தது முதல் லடாக் செக்டாரில் அவர்களது வானூர்தி தொடர்ந்து பறந்து வருகிறது.டர்புக்-ஸ்யோக்-தௌலத்பெக்ஓல்டி பகுதிகளை இணைக்கும் இடத்தில் இந்தியா கட்டி வந்த புதிய பிரிகேடு தலைமையகத்திற்கு மேலும் சீன வானூர்திகள் பறந்துள்ளன.இது தவிர கின்னூர் மற்றும் பரகோடி மாவட்டங்களை ஒட்டியும் சீன வானூர்திகள் பறந்துள்ளன.

லடாக் செக்டாரில் மட்டும் சீனா 10000ம் வீரர்களை குவித்துள்ளது.டேங்குகள்,அதிதூர ஆர்டில்லரிகள் ஆகியவற்றை குவித்துள்ளது.

தற்போது வரை நடந்த எந்த பேச்சுவார்த்தைகளும் தேவையான ரிசல்டை தரவில்லை.