முக்கிய அல் காய்தா தலைவரை கொன்று முக்கிய ஐ.எஸ் தளபதியை கைது செய்த ஃபிரெஞ்சு சிறப்பு படைகள் !!

  • Tamil Defense
  • June 7, 2020
  • Comments Off on முக்கிய அல் காய்தா தலைவரை கொன்று முக்கிய ஐ.எஸ் தளபதியை கைது செய்த ஃபிரெஞ்சு சிறப்பு படைகள் !!

கடந்த சில நாட்களில் மாலியில் ஃபிரெஞ்சு சிறப்பு படைகள் மேற்கொண்ட இருவேறு நடவடிக்கைகளில் முக்கிய அல் காய்தா தலைவர் கொல்லப்பட்டு மற்றோரு முக்கிய ஐ.எஸ் தளபதி கைது செய்யப்பட்டுள்ளான்.

ஜூன் மூன்றாம் தேதி அல்ஜீரிய எல்லையை ஒட்டியுள்ள மாலி நாட்டின் வடக்கு பகுதியில் முக்கிய அல் காய்தா தளபதியான அப்தெல்மாலெக் திரவுக்தால் மற்றும் சிலர ஃபிரெஞ்சு சிறப்பு படைகளால் கொல்லப்பட்டனர்

கொல்லப்பட்ட அப்தெல்மாலெக் 15வருட அனுபவம் மிக்கவன் எனவும், குண்டுகளை செய்வதிலும் கையாள்வதிலும் தேர்ந்தவன் எனவும் பல அப்பாவி மக்களின் சாவுக்கு காரணமானவன் எனவும் கூறப்படுகிறது.

இவன் மீதான தாக்குதலை நடத்த அமெரிக்கா உளவு தகவல்கள் வழங்கியுள்ளது. மேலும் ஃபிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் இத்துடன் 7 ஆண்டு கால தேடல் நிறைவு பெறுவதாக ட்விட் செய்துள்ளார்.

மேலும் மே19 அன்று மொஹம்மது எல் ம்ராபட் எனும் மூத்த ஐ.எஸ் பயங்கரவாதியை சாஹெல் பகுதியில் வைத்து ஃபிரெஞ்சு படைகள் கைது உள்ளன.

கடந்த சில மாதங்களில் மட்டுமே சாஹெல் பகுதியில் ஃபிரெஞ்சு படைகள் 500க்கும் அதிகமான பயங்கரவாதிகளை கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.