தைவானுக்கு ஆயுதம் விற்க கூடாது என ஃபிரான்ஸூக்கு சீனா எச்சரிக்கை; கொரோனா ஒழிப்பில் கவனம் செலுத்த ஃபிரான்ஸ் அறிவுரை !!

  • Tamil Defense
  • June 8, 2020
  • Comments Off on தைவானுக்கு ஆயுதம் விற்க கூடாது என ஃபிரான்ஸூக்கு சீனா எச்சரிக்கை; கொரோனா ஒழிப்பில் கவனம் செலுத்த ஃபிரான்ஸ் அறிவுரை !!

கடந்த புதன்கிழமை அன்று சீனா ஃபிரான்ஸ் தைவானுக்கு ஆயுதம் விற்றால் சீன – ஃபிரெஞ்சு உறவு மோசமடையும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

தைவான் பெரும்பாலும் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்தி வந்தாலும் குறிப்பிடத்தக்க அளவில் ஃபிரெஞ்சு ஆயுத அமைப்புகளும் தைவான் ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளன.

கடந்த 1991ஆம் ஆண்டு ஃபிரான்ஸ் 6 லஃபாயெட்டே ரக கார்வெட் கப்பல்களை தைவானுக்கு விற்றது பின்னர் 1992ஆம் ஆண்டில் 60 மிராஜ்2000 போர் விமானங்களையும் தைவானுக்கு விற்றது.

தற்போது தைவான் மேற்குறிப்பிட்ட கப்பல்களை நவீனபடுத்துவதற்காக ஃபிரான்ஸிடமிருந்து சில ஆயுதங்களை பெற விரும்புகிறது. இதனால் சீனா கோபமடைந்துள்ளது.

சீனா தைவான் பிரச்சினை மிகவும் உணர்ச்சிகரமானது எனவும், தைவானை ராணுவ பலத்தின் மூலமாக திரும்பவும் சீனாவுடன் இணைப்பது குறித்தும் யோசித்து வருகிறோம் எனவும் தைவான் சீனாவின் ஒரு பகுதி சீனாவுடன் நட்புறவு கொண்ட அனைத்து நாடுகளும் இந்த ஒரே சீனா கொள்கையை அங்கீகரித்து செயல்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது.

இதற்கு பதிலடியாக ஃபிரான்ஸ் கொரோனாவை ஒழிப்பதில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.