
பஞ்சாப் மாநில்த்தை கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வருகிறது.
தற்போது கல்வான் பள்ளதாக்கு பகுதியில் நடைபெற்ற மோதலில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 4 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இவர்களின் பெயர்கள்:
1) நாயப் சுபேதார். மந்தீப் சிங்
2) நாயப் சுபேதார். சத்நாம் சிங்
3) சிப்பாய். குர்தெஜ் சிங்
4) சிப்பாய். குர்பீந்தர் சிங்.
இவர்களின் சொந்த ஊர்களில் உள்ள பள்ளிக்கூடங்களின் தற்போதைய பெயர்களை மாற்றிவிட்டு இந்த வீரர்களின் பெயரை சூட்ட பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.
வீரமரணமடைந்த வீரர்களை கவுரவிப்பதற்கான இந்த பணிகளை பஞ்சாப் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
கேப்டன் அமரீந்தர் சிங் முன்னாள் ராணுவ அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.