போர் நடக்கும் பகுதியில் பறந்த இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானிகள்; இந்தியர்களாலேயே மறக்கப்பட்ட சாதனை பெண்மணிகளின் கதை !!

  • Tamil Defense
  • June 10, 2020
  • Comments Off on போர் நடக்கும் பகுதியில் பறந்த இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானிகள்; இந்தியர்களாலேயே மறக்கப்பட்ட சாதனை பெண்மணிகளின் கதை !!

1990களின் ஆரம்பத்தில் முதன் முதலாக பெண்கள் அதிகாரிகளாக விமானப்படையில் இணைக்கப்பட்டனர். ஃப்ளைட் லெஃப்டினன்ட்
குஞ்சன் சக்ஸேனாவும், ஃப்ளைட் லெஃப்டினன்ட் ஶ்ரீவித்யா ராஜனும் 25 பேர் கொண்ட முதலாவது பெண் விமானிகள் தொகுதியை சேர்ந்தவர்கள். இவர்களின் பெயர்கள் காலப்போக்கில் மறைந்து விட்டது என்பது துரதிர்ஷ்டவசமான நிகழ்வாகும் மாறாக இந்தியர்ஙளால் கொண்டாடப்பட்டு வெளிச்சம் இட்டு காட்டப்பட வேண்டியதற்கு உரியவர்கள் ஆவர்.

ஃப்ளைட் லெஃப்டினன்ட் குஞ்சன் சக்ஸேனா ராணுவ குடும்பத்தில் இருந்து வந்தவர் தந்தையும் சகோதரனும் ராணுவத்தில் பணியாற்றி வந்தனர்.
தில்லி ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் பட்டம் பெற்ற கையோடு இந்திய விமானப்படையில் இணைந்தார். அவருக்கு சிறு வயது முதலே போர் விமானியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் ஹெலிகாப்டர் விமானியாக அன்று தேர்வு செய்ய பட்டதே மிகப்பெரிய சாதனையாக இருந்தது.

ஃப்ளைட் லெஃப்டினன்ட் ஶ்ரீவித்யா ராஜனும் கல்லூரி படிப்பு முடிந்ததும் இந்திய விமானப்படையில் அதிகாரியாக இணைந்தார்.

ஹெலிகாப்டர் விமானிகளான இவர்களுக்கு 1999ஆம் ஆண்டு கார்கில் போர் வெடித்த போது தங்களது திறமையை நிருபிக்க சந்தர்ப்பம் கிட்டியது. தங்களது சிறிய ரக சீட்டா ஹெலிகாப்டருடன் போர்க்களத்தில் பறந்த முதல் இந்திய பெண்மணிகள் என்ற சாதனையை படைத்தனர்.

காயமடைந்த வீரர்களை மீட்பது, சப்ளை பொருட்களை கொண்டு சேர்ப்பது, பாகிஸ்தான் ராணுவ நிலைகளை வானிலிருந்து அடையாளம் கண்டு தகவல் அளிப்பது போன்ற பணிகளில் அவர்கள் இருவரும் உயிரை பணயம் வைத்து ஈடுபட்டனர்.

அவர்களது சிறிய சீட்டா ஹெலிகாப்டர் எவ்வித பாதுகாப்பும் அற்றது. ஒரு முறை கார்கில் விமானதளத்தில் அவர்கள் புறப்படுவதற்கு சற்று முன்னர் பாகிஸ்தான் ராணுவம் ஏவிய ஏவுகணை ஒன்று அதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டரின் அருகில் சென்று பின்புறம் இருந்த மலையில் மோதி வெடித்துள்ளது இப்படி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். இது போன்ற பல நிகழ்வுகளை இருவரும் இப்போரின் போது சந்தித்துள்ளனர்.

தங்களது ஹெலிகாப்டரில் இருவரும் இன்சாஸ் ரைஃபிள் மற்றும் கைத்துப்பாக்கிகளை வைத்திருந்தனர். ஒருவேளை தாக்கப்பட்டு எதிரி பகுதியில் விழுந்தால் அவர்களிடம் பிடிபடாமல் சண்டையிட்டு மடிந்திருப்போம் என்றார் குஞ்சன் சக்ஸேனா.

அச்சமயத்தில் தான் கேப்டன் சவ்ரப் காலியா மற்றும் அவரது வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்டு மிக கொடுரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் நமது வீராங்கனைகள் சிக்கும் நிலை வராமல் இருப்பது மிகவும் நல்லது.

இப்போரில் காட்டிய தீரத்திற்காக குஞ்சன் சக்ஸேனா அவர்களுக்கு மத்திய அரசு ஷவுரிய சக்ரா விருது வழங்கி கவுரவித்தது.

இவர்கள் இருவரும் போர் விமானங்களை ஒட்டவில்லை என்றாலும் அன்று இவர்கள் எடுத்து வைத்த அடி இன்று இந்திய விமானப்படையில் பெண் போர் விமானிகள் உருவாக்கம் வரை வந்துள்ளது. நிச்சயமாக இவர்களை போன்றோர் தான் நமது பெண் குழந்தைகளுக்கே முன்மாதிரியாக ரோல் மாடல்களாக இருக்க முடியும்.