காஷ்மீரில் 5 பயங்கரவாதிகளை காலி செய்த பாதுகாப்பு படையினர் !!

  • Tamil Defense
  • June 8, 2020
  • Comments Off on காஷ்மீரில் 5 பயங்கரவாதிகளை காலி செய்த பாதுகாப்பு படையினர் !!

நேற்று காஷ்மீரின் சோபியான் பகுதியில் உள்ள ரெபான் கிராமத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது தீடிரென பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுடன் மோதல் ஏற்பட்டது, இதில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஐவரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆவர்.

இந்த நடவடிக்கையில் 1ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ், 178ஆவது பட்டாலியன் மத்திய ரிசர்வ் காவல்படை மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை சிறப்பு நடவடிக்கை பிரிவு ஆகிய படையணிகள் பங்கு பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஆபரேஷன் நடந்து வருவதாகவும், யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.