காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் கைது பாதுகாப்பு படையினர் அதிரடி !!

  • Tamil Defense
  • June 25, 2020
  • Comments Off on காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் கைது பாதுகாப்பு படையினர் அதிரடி !!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்காமில் 5 பேர் கொண்ட பயங்கரவாத குழு பற்றிய தகவல் கிடைத்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையில் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்கள் பட்காமின் நர்பால் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையில் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை மற்றும் தரைப்படையின் 2ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் ஆகியோர் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.