இந்திய தரைப்படை தளபதியான ஜெனரல் நரவாணே அவர்களின் சமீபத்திய லடாக் விசிட்டின் போது 5 ராணுவ வீரர்களை கவுரவித்துள்ளார். இவர்கள் ஐவரும் சமீபத்திய மோதல்களில் சிறப்பாக செயல்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
14ஆவது கோர் கமாண்டர் லெஃப்டினன்ட் ஜெனரல். ஹரிந்தர் சிங், வடக்கு கட்டளையக தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல். ஒய்.கே. ஜோஷி ஆகியோர் சகிதம் 5 வீரர்களை சந்தித்து பேசிய ஜெனரல் நரவாணே அவர்களுக்கு ராணுவ தளபதி வாழ்த்து அட்டை வழங்கி கவுரவித்தார்.
இந்த ஐவரில் மூவர் கடந்த ஜூன்15 அன்று கல்வானில் பிபி14 பகுதியில் சீனர்களுடன் மிக திறம்பட போரிட்டவர்கள் ஆவர்.
மேலும் இருவர் கடந்த மே5-6 ஆகிய தினங்களில் பாங்காங் ஸோ அருகே நடைபெற்ற மோதலில் மிக திறம்பட செயல்பட்டவர்கள் ஆவர்.
இனிவரும் நாட்களில் கல்வான் மோதலில் பங்கேற்ற பல வீரர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர் என இந்திய ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.