
நேற்று சீன எல்லையில் நடைபெற்ற தாக்குதலில் கமாண்டிங் அதிகாரி ஒருவர் மற்றும் இரு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.துப்பாக்கியால் இரு நாட்டு வீரர்களும் தாக்கப்படவில்லை என்றும் கற்கள் மற்றும் தடிகளால் தாக்கப்பட்டனர் என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில் சீனப் பக்கம் கிட்டத்தட்ட ஐந்து வீரர்கள் வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கம்யூனிச நாடாக சீனா தனது உயிரிழப்புகளை என்றும் வெளியிடாது என்று கூறப்படுவதுண்டு.
இந்த சம்பவம் குறித்து சீன வெளியுறவுத்துறை தங்களுக்கு ஒன்றும் தெரியாது எனவும் இந்தியா தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க கூடாது எனவும் கூறியுள்ளது.