இந்திய சீன எல்லை விலகாரம் கவலையளிக்கிறது : இங்கிலாந்து பிரதமர்.போரிஸ் ஜாண்சன் !!

இங்கிலாந்து பாராளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் காம்மன்ஸ் இல் கன்ஸர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஃப்ளிக் ட்ரம்மண்ட் காமன்வெல்த் உறுப்பினரும்,உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கும் ஜனநாயகத்திற்கு சவால் விடும் சீனாவிற்கும் இடையிலான பிரச்சினை இச்கிலாந்தின் நலன்களை பாதிக்குமா அதன் விளைவுகள் என்ன என்று ஒரு கேள்வியை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த பிரதமர். போரிஸ் ஜாண்சன் லடாக்கில் இரு நாடுகள் இடையே நிலவி வரும் பிரச்சினை மிகவும் தீவிரமானது, அது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது எனவும்,

இங்கிலாந்து இந்த பிரச்சினையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது எனவும் கூறினார்.

மேலும் இந்த பிரச்சினையை இரு நாடுகளும் சுமுகமான முறையில் பேசி தீர்வு காண வேண்டும் என்பதில் இங்கிலாந்து தீர்க்கமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.