காஷ்மீரில் என்கவுன்டர்; மூன்று பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர் !!

  • Jecinth Albert
  • June 3, 2020
  • Comments Off on காஷ்மீரில் என்கவுன்டர்; மூன்று பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர் !!

இன்று காலை தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அஸ்தான் மொஹல்லா கங்கான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைக்க பெற பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர்.

தரைப்படை, மத்திய ரிசர்வ் காவல்படை மற்றும் காவல்துறையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடி வந்த போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுட பாதுகாப்பு படையினரும் திருப்பி தாக்கினர். சிறிது நேரத்தில் மூன்று பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்தினர்.

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை தலைவரான டிஜிபி தில்பாக் சிங் கூறுகையில் கொல்லப்பட்ட மூவரும் ஜெய்ஷ் இ மொஹம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிவித்தார்.