லிபிய எல்லைக்கு படைகளை நகர்த்தும் எகிப்து – லிபியாவில் ராணுவ நடவடிக்கையா ??

  • Tamil Defense
  • June 8, 2020
  • Comments Off on லிபிய எல்லைக்கு படைகளை நகர்த்தும் எகிப்து – லிபியாவில் ராணுவ நடவடிக்கையா ??

எகிப்து லிபிய எல்லைக்கு 18 ஏப்ராம்ஸ் டாங்கிகளை நகர்த்தி உள்ளது இதை தவிர குறைந்தது 6 மி24 தாக்குதல் ஹெலிகாப்டர்களும் லிபிய எல்லையோரம் நகர்த்தப்பட்டு உள்ளன.

லிபியாவில் எகிப்திய ஆதரவு பெற்ற காலிஃபா ஹஃப்தாரின் லிபிய தேசிய ராணுவமும் , துருக்கி மற்றும் கத்தார் ஆதரவு பெற்ற அரசு தேசிய படைகளும் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

எகிப்திய அதிபர் அல் சிஸி சமீபத்தில் அமைதி வழியில் இந்த போரை முடிக்க முயற்சி எடுத்துள்ள நிலையில் அது தோல்விமடைந்தால் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.

எகிப்துக்கு துருக்கி மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் குடைச்சல் கொடுப்பது குறிப்பிடத்தக்கது.