
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பல பாதுகாப்பு துறை நடவடிக்கைகளும் முடங்கின.
இதன் ஒரு பகுதியாக நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு பல முக்கிய ஏவுகணை சோதனைகளை கிடப்பில் போட்டது.
தற்போது அனைத்தும் ஏறத்தாழ இயல்பு நிலைக்கு திரும்பிவிட்ட சூழலில் மழைக்காலம் முடிந்ததும் கிடப்பில் உள்ள ஏவுகணை சோதனைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதல் வரம்பு அதிகரிக்கப்பட்ட பிரம்மாஸ் மற்றும் இடைதூர வான் இலக்கு ஏவுகணைகள் இதில் முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.