
பாக் ராணுவத்தின் மக்கள் மற்றும் செய்தி தொடர்பு பிரிவின் தலைமு அதிகாரியாக இருப்பவர் லெஃப்டினன்ட் ஜெனரல் பாபர் இஃப்திகார். இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் நமது நாட்டை விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியா பல்வேறு தளங்களில் அவமானப்பட்டுள்ளதாகவும், சீனா நேபாள் போன்ற நாடுகளுடன் எல்லை பிரச்சினை இருப்பதாகவும் அவர் தெரகவித்துள்ளார்.
மேலும் பேசுகையில் இந்தியாவின் எந்தவொரு நடவடிக்கைகக்கும் பாகிஸ்தான் ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் எனவும்,
நினைத்து பார்க்க முடியாத விளைவுகள் ஏற்படும் ஆகவே நெருப்புடன் விளையாட வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.