ட்ராலை தொடர்ந்து பயங்கரவாதிகள் இல்லாத பகுதியானது தோடா மாவட்டம்

  • Tamil Defense
  • June 29, 2020
  • Comments Off on ட்ராலை தொடர்ந்து பயங்கரவாதிகள் இல்லாத பகுதியானது தோடா மாவட்டம்

காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் நடைபெற்ற என்கௌன்டரில் ஹிஸ்புல் கமாண்டரான மசூத் என்பவனை இராணுவ வீரர்கள் வீழ்த்தினர்.

காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் கடைசி பயங்கரவாதியாக இருந்த மசூத் என்பவனை இன்று நடைபெற்ற என்கௌன்டரில் இராணுவ வீரர்கள் காலி செய்தனர்.இத்துடன் தோடா மாவட்டம் பயங்கரவாதம் இல்லாத மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

கற்பழிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த மசூத் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தில் இணைந்து தோடா மாவட்டத்தின் கமாண்டராக மாறியுள்ளான்.இவனை வீழ்த்தியது காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு படைக்கு மிகப் பெரிய வெற்றி என காஷ்மீர் காவல்துறை தலைவர் தில்பக் சிங் கூறியுள்ளார்.

ஜம்மு பகுதியில் உள்ள தோடா மாவட்டம் மீண்டும் பயங்கரவாதிகள் அற்ற மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

இவன் தவிர மேலும் இரு லஷ்கர் பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.கடந்த சில மாதங்களாகவே இரு பயங்கரவாத இயக்கங்களும் இணைந்து பணிபுரிந்து வருகின்றனர்.