Breaking News

உள்நாட்டிலேயே போர் விமான என்ஜின் தயாரிக்க அதிகரித்து வரும் கோரிக்கைகள் !!

  • Tamil Defense
  • June 9, 2020
  • Comments Off on உள்நாட்டிலேயே போர் விமான என்ஜின் தயாரிக்க அதிகரித்து வரும் கோரிக்கைகள் !!

இந்தியா தற்போது சொந்தமாக நான்காவது போர் விமான திட்டத்திற்கும் சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே ஒரு போர் விமான என்ஜினை தயாரிக்க வேண்டும் எனும் கோரிக்கைகள் அதிகரித்து கொண்டே வருகின்றன.

இதற்கு காரணம் இந்தியாவின் தேஜாஸ் மார்க்1ஏ, தேஜாஸ் மார்க்2, கடற்படைக்கான் டெட்பெஃப் மற்றும் ஆம்கா ஆகிய விமானங்களில் அமெரிக்க ஜி.இ என்ஜின்கள் பயன்படுத்தப்படும்.

இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படைக்கு தோராயமாக 300க்கும் அதிகமான என்ஜின்கள் தேவை, ஏறத்தாழ 40% போர் விமானங்களுக்கு ஒரே வெளிநாட்டு நிறுவனத்தின் என்ஜின்களை பயன்படுத்துவதும் பிரச்சினைகளை உருவாக்கலாம்.

சமீபத்தில் விமானப்படை தளபதி பதவ்ரியா அளித்த பேட்டி ஒன்றில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் விரைவாக ஏதேனும் ஃபிரெஞ்சு அல்லது அமெரிக்க நிறுவனத்தின் உதவியோடு ஒரு போர் விமான என்ஜினை உருவாக்கும்படி கோரிக்கை விடுத்தார்.

அடுத்த 10-15 வருடங்களில் போர் விமான என்ஜின் தொழில்நுட்பத்தை கரைத்து குடித்தால் ஆம்கா மற்றும் பிற விமானங்களில் நமது சொந்த என்ஜினை பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.