பிரதமர் மோடியுடன் அவசர சந்திப்பு: நிலைமையை விளக்கும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் !!

நேற்று கல்வான் நாலா பகுதியில் இந்திய சீன படைகளிடையே நடைபெற்ற மோதலில் நமது தரைப்படையின் கர்னல் பிகுமல்லா சந்தோஷ் குமார், ஹவில்தார். பழனி மற்றும் இன்னோரு வீரர் ஆகியோர் வீரமரணமடைந்தனர்.

வீரமரணமடைந்த கர்னல் சந்தோஷ் பாபு இந்திய ராணுவ பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த மோதலில் 5 சீன வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து இன்று பிரதமர் மோடியை அவசரமாக சந்தித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கல்வான் பகுதியில் நிலவி வரும் நிலைமை குறித்து விளக்குகிறார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சீனா இந்திய வீரர்கள் எல்லை தாண்டியதாகவும் அதன் காரணமாக இந்த மோதல் நிகழ்ந்துள்ளதாகவும் கூறியுள்ளது.