Breaking News

கூட்டுபடைகள் தலைமை தளபதி, முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு !!

  • Tamil Defense
  • June 22, 2020
  • Comments Off on கூட்டுபடைகள் தலைமை தளபதி, முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு !!

நேற்று தில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் முப்படைகளுக்கும் சிறப்பு அதிகாரங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது மேலும் முப்படை தளபதிகளுக்கு இந்திய எல்லையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதைத்தவிர சீனாவை சமாளிப்பதற்கான வேறு வழிமுறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.