விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் அதிநவீன நீர்மூழ்கி மீட்பு வாகன மையம் திறப்பு !!
1 min read

விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் அதிநவீன நீர்மூழ்கி மீட்பு வாகன மையம் திறப்பு !!

விசாகப்பட்டினம் கடற்படை தளம் இந்திய கடற்படையின் நீர்முழ்கிகள் பிரிவுக்கு தலைமையகமாக செயல்பட்டு வருகிறது.

இந்த தளத்தில் ஜூன் 10 அன்று அதிநவீன நீர்மூழ்கிகள் மீட்பு வாகன மையத்தை வைஸ் அட்மிரல் அதுல் குமார் ஜெயின் திறந்து வைத்தார்.

உலகில் 40 நாடுகள் நீர்மூழ்கி கப்பல்களை இயக்கி வருகின்றன ஆனால் அவற்றில் ஒரு சில நாடுகளிடம் மட்டுமே இத்தகைய நீர்மூழ்கிகள் மீட்பு வசதி உள்ளது. தற்போது இந்தியாவும் இப்பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மையத்தில் அதிக ஆழ நீர்மூழ்கி மீட்பு வாகனம், ரிமோட் கண்ட்ரோல் வாகனம், சோனார் கருவிகள் போன்றவை உள்ளன.

மேலும் இந்த மீட்பு வாகனத்தில் டி கம்ப்ரஷன் சேம்பர் மற்றும் ஹைப்பர்பேரிக் சேம்பர் ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.