ஆஸ்திரேலியாவில் இணையவழி தாக்குதல் சீனா மீது சந்தேகம் !!

  • Tamil Defense
  • June 19, 2020
  • Comments Off on ஆஸ்திரேலியாவில் இணையவழி தாக்குதல் சீனா மீது சந்தேகம் !!

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் இன்று நிருபர்களை சந்தித்து சிறிது காலமாக ஆஸ்திரேலியா மீத இணையவழி தாக்குதல் நடைபெற்று வருவதாக கூறினார்.

இந்த தாக்குதல் ஆஸ்திரேலிய வர்த்தக நிறுவனங்கள், அரசு இணையதளங்கள், மருத்துவமனை இணையதளங்கள் ஆகியவற்றை குறிவைத்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் இதன் பின்னனியில் சில வெளிநாட்டு சக்திகள் இருப்பதாகவும் ஆனால் யார் என்பதை குறிப்பிட விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அரசின் மூத்த அதிகாரிகள் இந்த தாக்குதல்களின் பின்னனியில் சீனா இருப்பதாக கூறுகின்றனர்.