
யூனியன் பிரதேசமான காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தின் காலகோட் எனும் பகுதியில் தற்போது என்கௌன்டர் நடைபெற்று வருகிறது.
காலக்கோட் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்பு படைகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அந்த பகுதியை படைகள் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையை தொடங்கின.
தற்போது ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.
சிஆர்பிஎப்,காஷ்மீர் காவல்துறை மற்றும் இராணுவம் இணைந்த படைப் பிரிவு தற்போது அங்கு பயங்கரவாதிகளை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.