அமைதிப்பேச்சுவார்த்தை: மே4-க்கு முன் இருந்த பகுதிகளுக்கு சீன படைத்திரும்ப இந்தியா கோரிக்கை

  • Tamil Defense
  • June 22, 2020
  • Comments Off on அமைதிப்பேச்சுவார்த்தை: மே4-க்கு முன் இருந்த பகுதிகளுக்கு சீன படைத்திரும்ப இந்தியா கோரிக்கை

இந்தியாவின் தற்போதையை எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து மே-4க்கு முன் இருந்த பகுதிகளுக்கு சீன இராணுவம் திரும்ப வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் கமாண்டர் அளவிலான தாக்குதலின் போது இந்தியா சீனாவிடம் சீனப்படைகள் வெளியேறுவதற்கான கால நேரத்தை அளிக்க (டைம்லைன்) வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா சீனா இடையேயான பதற்றத்தை குறைக்க தற்போது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

ஐந்து தலைமுறைகளுக்கு பிறகு ஜீன்15ல் நடைபெற்ற ஆக்ரோச சண்டைக்கு பிறகும் கூட தற்போது பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காலை 11.30 மணிக்கு சூசுல் செக்டாருக்கு எதிர்ப்புறம் சீன பகுதியான மோல்டோ என்னுமிடத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

14வது கார்ப்ஸ் கமாண்டர் லெப் ஜென் ஹரிந்தர் சிங் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.