சீன எல்லையோரம் 5 நாட்களில் மீண்டும் கட்டி முடிக்கப்பட்ட இடிந்து போன பாலம் !!

  • Tamil Defense
  • June 29, 2020
  • Comments Off on சீன எல்லையோரம் 5 நாட்களில் மீண்டும் கட்டி முடிக்கப்பட்ட இடிந்து போன பாலம் !!

எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பு உத்தராகண்ட் மாநிலத்தில் இடிந்து போன பாலத்தை மீண்டும் ஐந்தே நாட்களில் கட்டி முடித்துள்ளது. தற்போது இந்த பாலம் பொது போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

சீன எல்லையோரம் அமைந்துள்ள இந்த பாலம் முன்ஸ்யாரி – மிலம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. கடந்த 22ஆம் தேதி ஒரு லாரி கனரக பொருளுடன் இந்த பாலத்தை கடக்க முயன்ற போது பாலம் எடையை தாங்காமல் இடிந்து விழுந்தது.

இதுகுறித்து எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில் பொதுவாக இத்தகைய பாலங்களை கட்ட ஒரு மாத காலம் ஆகும் ஆனால் இது எல்லையோரம் அமைந்துள்ள முக்கியமான வழித்தடம் என்பதால் விரைந்த கட்டி முடித்தோம் என்றார்.

இந்த பாலம் தற்போது முன்பு இருந்ததை விட இரட்டிப்பு வலிமை மற்றும் சுமை தாங்கும் திறனுடன் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.