சீன செயல்பாடுகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் : சீனாவுக்கான இந்திய தூதர் எச்சரிக்கை !!

  • Tamil Defense
  • June 27, 2020
  • Comments Off on சீன செயல்பாடுகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் : சீனாவுக்கான இந்திய தூதர் எச்சரிக்கை !!

சீனாவின் ஒருதலைபட்சமான முரட்டுத்தனமான செயல்பாடுகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் “சீனா எல்லை விவகாரத்தை ஒருதலைபட்சமான முரட்டுத்தனமான செயல்பாடுகள் மூலமாக மாற்ற நினைப்பது சரியல்ல” என்றும்,

“களத்தில் உள்ள சீன படையினர் இந்திய படையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் முரட்டுத்தனமான செயல்பாடுகள் மூலமாக இருதரப்பு உறவில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாக” கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் “இந்த விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது, சீனா இந்திய படையினர் ரோந்து செல்லும் போது அவர்களை தடுப்பது மற்றும் முரட்டுத்தனமாக நடந்து கொள்வது போன்ற செயவ்களை நிறுத்தி கொள்ள வேண்டும்” என்றார்.

அதை போல கல்வான் மீது உரிமை கோரும் சீன நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துவிட்டு, இத்தகைய மிகைப்படுத்தப்பட்ட உரிமை கோரல்கள் எதற்குமே உதவப போவதில்லை என்றார்.