
ஜப்பான் நாட்டின் அமாமி ஒஷிமா தீவுகளுக்கு அருகே சீன கடற்படையின் நீர்மூழ்கி ஒன்று அத்துமீறி ஊடுருவி உள்ளது.
ஜப்பானிய கடற்படையின் நாசகாரி போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் கண்காணிப்பு விமானங்கள் இதனை உறுதி செய்துள்ளன.
இந்த குறிப்பிட்ட சீன நீர்மூழ்கி கப்பலானது கடலுக்கு அடியில் டோக்கோரா மற்றும் அமாமி ஓஷிமா தீவுகளுக்கு இடையேயான பகுதி வழியாக ஊடுருவி உள்ளது.
ஜப்பானிய கடற்படையின் திறன் வெளிபட்டு விடும் என்பதால் அது எந்த வகை நீர்மூழ்கி என்பதை ஜப்பான் வெளியிட மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.