
சீன ராணுவத்தின் ரிசர்வ் படை பிரிவுகளின் முழு கட்டுபாட்டு அதிகாரத்தையும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஜூலை 1 முதல் எடுத்துக்கொள்ள உள்ளார்.
இதற்காக இந்த ரிசர்வ் பிரிவுகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மத்திய ராணுவ கமிஷன் ஆகியவற்றின் கீழ் கொண்டு வர உள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் மேற்குறிப்பிட்ட இரண்டு அமைப்புகளின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் சீன ராணுவத்தின் முழு கட்டுபாட்டு அதிகாரத்தையும் தன்னகத்தே சீன அதிபர் ஜி ஜின்பிங் வைத்திருக்க விரும்புவது வெட்ட வெளிச்சமாகிறது.
தற்போது ரிசர்வ் படைகளின் கட்டுபாட்டு அதிகாரம் சீன ராணுவம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிராந்திய பிரிவுகளிடம் உள்ளது.
அதே போல மறைந்த சீன தலைவர் மாவோவுக்கு பின்னர் சீன வரலாற்றிலேயே அதிக சக்தி வாய்ந்த தலைவராக ஜி ஜின்பிங் உருவெடுத்துள்ளார் மேலும் இன்னும் அதிகாரங்களை பெற்று சீனாவின் சர்வ வல்லமை பொருந்திய தலைவராக உருவெடுக்க முயற்சித்து வருகிறார்.