கிழக்கு லடாக் பகுதியில் இந்திய முகாம்களின் மேல் பறக்கும் சீன ஆளில்லா விமானம்

  • Tamil Defense
  • June 25, 2020
  • Comments Off on கிழக்கு லடாக் பகுதியில் இந்திய முகாம்களின் மேல் பறக்கும் சீன ஆளில்லா விமானம்

இந்திய சீன எல்லையில் பல்வேறு பகுதிகளில் மோதல்கள் நடந்து வரும் நேரத்தில் கிழக்கு லடாக் பகுதியில் இந்திய நிலைகளின் மீது சீன ட்ரோன்கள் பறந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களில் நான்கு முறைகள் இந்திய முகாம்களுக்கு மேலே இது தென்பட்டுள்ளது.வியூக முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை சேகரிக்க இந்த விமானம் பறந்துள்ளது.

இதே போல சீன நிலைகளை பற்றி கண்காணிக்க இந்தியாவும் ஆளில்லா விமானங்களை உபயோகித்து வருகிறது.இந்திய இராணுவத்தின் 14வது கார்ப்ஸ் படைப் பிரிவு நடுஉயர நீண்ட நேரம் பறக்க கூடிய ஆளில்லா விமானங்களை உபயோகித்து வருகிறது.

10கிமீ உயரத்தில் 24மணி நேரம் இந்த ஆளில்லா விமானம் தொடர்ந்து பறக்க கூடியது.இது தவிர வீரர்கள் கையில் இருந்து ஏவக்கூடிய சிறிய ரக ட்ரோன்களையும் இராணுவ வீரர்கள் உபயோகித்து வருகின்றனர்.

இது போன்ற அதிஉயர் பகுதிகளை கண்காணிக்கவே வேண்டி இந்திய இராணுவம் ‘ஸ்பைலைட்’ என்ற ட்ரோனை உபயோகித்து வருகிறது.

இஸ்ரேலிய கூட்டுத்தயாரிப்பு ட்ரோன் ஆன இது எந்தவித காலநிலையிலும் பயன்படுத்த கூடியது.30000 அடி உயரத்தில் பறக்க கூடியது.வீடியோக்களை உடனடியாக தளத்திற்கு நேரடியா அனுப்ப கூடியது.