இந்திய வீரர்களால் வீழ்த்தப்பட்ட சீன கலோனல்-உறுதி செய்த சீனா

ஜீன் 15 அன்று இரவு லடாக் எல்லையில இந்திய சீனத் துருப்புகள் கடுமையாக தாக்கி கொண்டதில் இந்தியத் தரப்பில் 20வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.சீனத் தரப்பில் 40+ வீரர்கள் உயிரிழந்தனர் என்ற தகவலும் பின்பு வெளியானது.

இந்தியா வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்களை வெளியிட்டு அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து இந்தியர்கள் கண்ணிர்மல்க இறுதி வணக்கம் செலுத்தினர்.கம்யூனிச நாடான சீன தனது பக்கம் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கையை வெளியிடவில்லை.இது குறித்து தகவல் வெளியிட்ட குளோபல் டைம்ஸ் நாங்கள் எண்ணிக்கையை வெளியிட்டு பிரச்சனையை தொடர விரும்பவில்லை என கூறியிருந்தது.

ஆனால் தற்போது தங்கள் தரப்பில் ஒரு கமாண்டிங் அதிகாரி உயிரிழந்துள்ளார் என்பதை உறுதி செய்துள்ளது சீனா.இன்று நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் கமாண்டிங் அதிகாரியின் மரணத்தை உறுதிப்படுத்தியது.